ADVERTISEMENT

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் தண்ணீரில் அடித்துச் சென்று பலி! 

09:51 AM Aug 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் அருகே குமாராட்சியைச் சேர்ந்தவர் சோழன் (45). மாற்றுத்திறனாளியான இவர், காட்டுமன்னார்கோவில் கருவூலத்தில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி வருகிறார். சோழன், இன்று ஆக. 8-ந் தேதி காலை குமராட்சி பகுதியை ஒட்டி ஓடும் தெற்கு ராஜன் வாய்க்காலில் குளிக்கச் சென்றுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் இவர் கரைக்கு வராததால், அப்பகுதியில் இருந்தவர்கள் அவர் ஆற்றில் அடித்துச் சென்றிருக்கலாம் எனத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதனையடுத்து தீயணைப்புத் துறையினர் வாய்க்காலில் இறங்கி சோழனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அவரது உடல் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுப் பலியாகி வாய்க்கால் ஓரத்தில் உள்ள புதரில் ஒதுங்கி இருந்தது. இதனைத் தீயணைப்புத் துறையினர் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிதம்பரம் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் வெள்ள நீர் அதிக அளவு சென்று கொண்டிருப்பதால் பொதுமக்கள் குளிப்பது உள்ளிட்ட எந்த தேவைக்கும் வாய்க்காலுக்கு வரக்கூடாது என்றும், கால்நடைகள், குழந்தைகளை வாய்க்காலுக்கு ஓரமாக அழைத்துச் செல்லக்கூடாது எனவும் பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT