ADVERTISEMENT

பெற்றோறை இழந்து அனாதையான பிள்ளைகளுக்கு அரசு கல்வி உதவி!

04:31 PM Feb 18, 2018 | rajavel



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் மேட்டுப்பட்டியை சேர்ந்த காளியப்பன் மனைவி விஜயா மார்பக புற்று நோயால் திடீரென அரசு மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்தார். இப்படி திடீரென விஜயா இறந்ததால் அவரது உடலை அடக்கம் செய்ய கூட பணம் இல்லாமல் விஜயாவின் மகன்களான 15 வயதான மோகன்ராஜ்சும் வேல்முருகனும் தவித்தனர்.

அதை கண்டு ஆஸ்பத்திரில் இருந்த நோயாளிகளும். பொதுமக்களும் உதவி செய்ததின் பேரில் விஜயாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விஷயம் காட்டு தீ போல் சமூக வலைதளங்களில் பரவியதின் மூலம் அனாதையான விஜயாவின் மூன்று பிள்ளைகளுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் தானாகவே முன் வந்து உதவி செய்தனர். அதுபோல் தொகுதி MLA வான டாக்டர் பரமசிவமும் நேரில் சென்று விஜயாவின் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி 50 ஆயிரமும் நிதி உதவிசெய்து மீண்டும் அரசு மூலம் படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறேன் என உறுதி கூறி இருந்தார்.

அதை தொடந்து இந்த விஷயத்தை மாவட்ட கலெக்டர் வினைய் காதுக்கும் MLA கொண்டு சென்றார். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து திண்டுக்கலில் உள்ள அரசு பள்ளியில் மூன்று பேரையும் சேர்த்து கல்வி கற்க உதவி செய்ததுடன்மட்டும்மல்லாமல் அந்த பிள்ளைகளை அரசு தங்கும் விடுதியில் சேர்க்க வழி செய்தார்.|


சக்தி

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT