Mother arrested

Advertisment

சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவர்கள் சத்தியராஜ் - செலஸ்டின் தம்பதியினர். சத்தியராஜ் கட்டிட வேலை செய்பவர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அக்டோபர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 12ஆம் தேதி அந்த பெண் குழந்தை உயிரிழந்தது. இதனால் தந்தை சந்தியராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அப்போது தாயார் செலஸ்டின், பாலூட்டும்போது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் பேசியதால் சந்தேகம் அடைந்தனர்.

குழந்தை தலையில் பின் பக்கம் காயம் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் செலஸ்டினை தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

கட்டிட தொழிலுக்கு சென்ற கணவருடன், செலஸ்டின் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சத்தியராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது செலஸ்டினுக்கு தெரிய வந்தது. இதனை கேட்டதில் இருந்து, தான் ஏமாற்றப்பட்டோம் என நினைத்து தாங்க முடியாமல் அடிக்கடி சத்தியராஜ் மீது சண்டை போட்டுள்ளார்.

இப்பிரச்சனையை யாரிடம் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் ஆத்திரத்தில் இருந்துள்ளார். கணவர் மீதான கோபம் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. கணவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து, குழந்தையின் கால்கள் இரண்டையும் சேர்ந்து பிடித்து பொம்மையைப் போல் தரையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பின்மண்டை உடைந்து அலறி துடித்த அந்த பச்சிளம் சிசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதைப்போல் நாடகம் ஆடிய தாயை, கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.