ADVERTISEMENT

ஆபாசமாகப் போனில் பேசி காக்கிகளைக் கலங்கடிக்கும் பெண்!

12:15 PM Sep 14, 2018 | cnramki


‘காய்ஞ்சி போன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதலடையும்.
அந்த நதியே காய்ஞ்சி போயிட்டா..
துன்பப்படறவங்க எல்லாம் அந்தக் கவலையை
தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க..
ஆனா.. தெய்வமே கலங்கி நின்னா..
அந்த தெய்வத்துக்கு
யாரால ஆறுதல் சொல்ல முடியும்?’

-தங்கப்பதக்கம் சினிமாவில் சோதனை மேல் சோதனை பாடலில் வரும் இந்த வரிகளைத் தன் செல்போனில் காலர் ட்யூனாக வைத்திருந்தார் சென்னையைச் சேர்ந்த அந்தக் காக்கி நண்பர். ‘அப்படி என்ன சோதனை?’ என்று அவரிடம் கேட்டபோது, புலம்பித் தீர்த்துவிட்டார்.

“டெய்லி காலைல 10 மணிக்கு ஆரம்பிச்சிடுறா. லேண்ட் லைன் போனை அட்டர்ன் பண்ணுனா போதும்.. ஒரே ஆபாச அர்ச்சனைதான். நாம சொல்றத காது கொடுத்து கேட்க மாட்டா. நாங்க போனை கட் பண்ணினாலும், மீண்டும் போன் பண்ணுவா. இப்ப உயிரோடு இருக்கிற அரசியல் தலைவரில் ஆரம்பித்து, செத்துப்போன அத்தனை தலைவர்களையும் ஆபாசமாகப் பேசி அசிங்கப்படுத்திடுவா. இதனால, காலர் ஐடியில அவ நம்பரை பார்த்துட்டோம்னா.. நாங்க போனை எடுக்க மாட்டோம். உடனே உள்ளே இருக்கிற ரூம்ல இருந்து இன்ஸ்பெக்டர் ஐயா, ‘ஏம்பா இத்தனை பேரு இருக்கீங்க.. போனை எடுக்க மாட்டீங்களா?’ என்று கேட்பார். ‘சார்.. அந்த பொம்பளை..‘ என்று நாங்க சொன்னதும், ‘அப்படியா?’ என்று கேட்டுவிட்டு அமைதியாகி விடுவார்.

அந்தப் பெண் பேசுறது அத்தனையுமே சென்சார் ரகம்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நேரடியாக வீட்டிற்கே போய் சத்தம் போட்டோம். அப்போதுதான் அந்தப் பெண், சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. உறவுக்காரங்ககிட்ட அந்த பொம்பளைகிட்ட போனை கொடுக்காதீங்கன்னு சொல்லிட்டு வந்தோம். ஆனா தீர்வு தான் இல்ல. இப்ப எங்களோட கோரிக்கை என்னான்னா, யாராவது அந்தப் பொண்ணுகிட்ட இருந்து செல்போனைப் பிடுங்கி, அதுல இருக்கிற எங்க ஸ்டேஷன் நம்பரை அழிச்சிட்டா போதும். உங்களுக்குப் புண்ணியமா போகும்.” என்று வானத்தைப் பார்த்துக் கும்பிட்டார்.

சென்னை இ-3 தேனாம்பேட்டை காவலர்களின் சோதனையை விவரித்த அந்தக் காக்கி நண்பருக்கு நம்மாலும் ஆறுதல் கூறமுடியவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT