ADVERTISEMENT

பெண் குழந்தைகள் தினம்: 40 குழந்தைகளுக்குத் துவங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புத் திட்டம்

02:58 PM Jan 24, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை பெண் குழந்தைகளுக்கு இந்திய தலைமை தபால் நிலையம் மூலம் மத்திய அரசு அறிவித்திருந்த செல்வமகள் சேமிப்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 40 பெண் குழந்தைகளுக்கு முதல் வருட தவணையாக ரூபாய் 250 திருச்சி தலைமை தபால் நிலையம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று அதற்கான நிகழ்ச்சி மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

அதில், மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், பொன்மலை காவல் ஆய்வாளர் நசீம், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன், துணைக் கண்காணிப்பாளர் குருசங்கர், அப்துல் லதீப், அஞ்சல் துறை அதிகாரிகள், துணை அஞ்சலக அதிகாரி செந்தில்குமார், வணிக அதிகாரி ஐசக் சேவியர், வட்டாரக் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் காஞ்சனா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மற்ற அலுவலர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT