ADVERTISEMENT

பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம்

07:33 AM Jul 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

கோப்புப்படம்

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் உள்ளன. இந்த காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. ஏற்கனவே இதற்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 22 தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அந்த வகையில், கடந்த 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தின் வாரிசுகள், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

இந்நிலையில் இன்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT