Tamil Nadu Engineering Consultation Starts Today

தமிழ்நாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. ஏற்கனவே இதற்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

Advertisment

அந்த வகையில், இன்று முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஜூலை 28 ஆம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக பொதுக் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 2 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 3 ஆம் தேதி வரைமூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.