ADVERTISEMENT

புறக்கணித்த இபிஎஸ் - ஓபிஎஸ்; டெல்லிக்கு ஓடிப் போன ஐபிஎஸ் - காயத்ரி ரகுராம் தாக்கு 

01:22 PM Feb 02, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக தனது ஆதரவு நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி அணி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் பன்னீர்செல்வம் அந்தத் தொகுதியில் பாஜக போட்டியிட்டால் எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்கி விடுவோம் எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின்றி இபிஎஸ் அதிமுக போட்டியிடுகிறது. பாஜகவிடம் கேட்காமல் வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ். சில தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் வெறும் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமே கொடுக்கிறார் ஐ.பி.எஸ். அது காமெடி மாறி வருகிறது. 2024 தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும் என்பது முதல் பஞ்ச் டயலாக். 25 இடங்களில் வெற்றி பெறுவார் என்பது இரண்டாவது பஞ்ச் டயலாக். ஈரோடு இடைத்தேர்தல் மூலம் கூட்டணி கட்சி என்ன செய்ய முடியும் என்று காட்டிய பிறகு, இப்போது பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடிப் போன ஐ.பி.எஸ். இப்பவே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணிக் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT