ADVERTISEMENT

காந்தி 150.. விதைப்பந்துகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

10:51 PM Sep 26, 2019 | kalaimohan

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 10 ஆயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

ADVERTISEMENT


இப்பள்ளியில், தேர்வு விடுமுறையில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அதனால் பசுமை நிறைந்த கிராமங்கள் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதனால் இழந்த மரங்களை மீட்கும் முற்சியாக பலதரப்பினரும் ஈடுபட்டு வந்தாலும் பள்ளி மாணவர்கள் பசுமையை மீட்டெடுக்கும் விதமாக, விதைப்பந்துகளை தயாரித்து இப்பகுதியில் நடவு செய்யவேண்டும் என மாணவர்களிடம், பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.மனோகரன் ஆலோசனை வழங்கினார்.

இதையடுத்து, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் பி.பாலசுப்பிரமணியன் முன்னிலையில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் என்.கோபிகிருஷ்ணா மேற்பார்வையில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் தலைவர் காவியச்செல்வன் தலைமையில், மாணவர்கள் விதைப்பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிறைவு நாளான செப்.30 திங்கள் கிழமை மாணவர்கள் விதைப்பந்துகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT