ADVERTISEMENT

"பழங்கள் விற்பனை தடைப்பட கூடாது" - தமிழக அரசு அறிவிப்பு!

11:48 AM May 12, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காலை 8 மணி முதல் 12 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மருந்து கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், தற்போது நாட்டு மருந்து கடைகளைத் திறப்பதற்கு அரசு நேற்று (11.05.2021) அனுமதி அளித்துள்ளது. மேலும் பல கடைகளைத் திறந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிலும், குறிப்பாக நோயாளிகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் பழங்களின் விற்பனை தடைபடக் கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT