ADVERTISEMENT

சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை தகவல்

08:25 PM Dec 22, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் 'சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ்' நிறுவன சொத்துக்கள் முடக்கப்படுவதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸின் ரூபாய் 66.93 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 234.75 கோடி மதிப்புடைய சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 ஆம் ஆண்டு கமர்சியல் ஷோரூம் ஒன்றை கட்டுவதற்காக இந்தியன் வங்கியில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் 150 கோடி ரூபாய், அதன்பின் 90 கோடி ரூபாயை கடனாகப் பெற்றதாகவும் ஆனால் அந்தக் கடன் தொகையை அவர்கள் வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT