ADVERTISEMENT

என்னை வேண்டுமென்றே நீக்கியுள்ளனர்: முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி

03:01 PM Jul 03, 2018 | rajavel


அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்து தன்னை வேண்டுமென்றே நீக்கம் செய்து விட்டனர் தொழிற்சங்க சட்ட விதிகளின்படி இவர்கள் செய்தது தவறு முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அஇஅதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அவர், அண்ணா தொழிற்சங்க சட்ட விதிகளின்படி எனக்கு முறையாக எந்தவிதமான விளக்கமும் அறிக்கைகள் வழங்கவில்லை, என்னை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் முறையாக சம்மன் அனுப்பி விளக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் அதை செய்யாமல் விடுவித்துள்ளனர். என்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டுதான் ஆகஸ்ட் மாதம் மீண்டும் அதே பதவியில் பணியமர்த்தினார். ஆனால் இவர்கள் நான் உறுப்பினராக இல்லை என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு.

தொழிற் சங்க உறுப்பினர் அல்லாதவர் ஒருவர் எப்படி அந்த பதவியில் இருக்க முடியும். அதனால் இவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. மேலும் கடந்த முறை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது நான் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு நான்காயிரம் ரூபாய் வாங்கி கொண்டிருந்தவர்களை 12 ஆயிரம் வரை உயர்த்தினேன். எனவே தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரும் என்னுடன் தான் உள்ளனர். மேலும் நான் தொழிற்சங்க வங்கி கணக்கில் 12 மற்றும் 18 கோடி வரை சேர்த்து வைத்துள்ளேன். இவர்கள் தொழிற்சங்கத்தை நடத்த முடியாது.

எனவே என்னை வேண்டுமென்றே அந்த பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். நான் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதால் அந்த அந்த பொறுப்பிற்கு மற்றவர்களை இவர்களால் நியமிக்க முடியாது. எனவே தான் இவர்கள் ஒரு குழு அமைத்து உள்ளனர். நிச்சயமாக அந்த வழக்கு எனக்கு சாதகமாக வரும். தொழிற்சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் என் பக்கம் தான் உள்ளனர். தற்போது டிடிவி தினகரன் அணியில் எனக்கு மீண்டும் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு டிடிவி தினகரன், சசிகலாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT