ADVERTISEMENT

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் குருகுலம்.

03:10 AM Sep 21, 2019 | santhoshb@nakk…

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் குருகுலம். அது ஈரோடு தான் ஈரோட்டில் தந்தை பெரியாரின் இல்லத்தில் கலைஞர் பணியாற்றினார். அதிலிருந்து பெரியாரின் தொண்டனாக அண்ணாவின் சீடராக வளர்ந்து திமுகவில் தலைமைப் பொறுப்புக்கு வந்து ஐந்து முறை முதல்வராக பணியாற்றியவர் மறைந்த முதல்வர் கலைஞர். இவருக்கு சிலை வைக்க வேண்டும் என ஈரோடு திமுகவினர் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டார்கள்.

ADVERTISEMENT


ஈரோட்டின் மைய பகுதியில் உள்ளது பன்னீர்செல்வம் பூங்கா. இந்தப் பூங்காவின் முகப்பில் இருந்த தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளை போக்குவரத்து நெரிசல் என காரணம் காட்டி அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தபோது, ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி தலைமையில் மாநகராட்சியிடம்? தலைவர்கள் சிலை அங்கேயே போக்குவரத்து நெரிசல் இல்லாமல் நாங்கள் வைக்கிறோம் என கூறி மாநகராட்சியிடம் அனுமதி பெற்றனர். அதன் பிறகு பூங்காவின் முகப்பிலிருந்து பெரியார் அண்ணா சிலை பூங்காவின் பின்புறம் பகுதியை சீரமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் கட்டிடம் கட்டி பெரியார் அண்ணா சிலைகள் திமுகவினர் நிறுவினார்கள் இச்சிலைகளை சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுக தலைவராக உள்ள மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT


இந்த சிலைகள் உள்ள மேடையில் மேலும் மூன்று சிலைகள் அமைக்க வசதியாக இடம் வைத்து வைத்திருந்தனர் மே டை அமைத்த ஈரோடு திமுகவினர் இந்த நிலையில் ஈரோடு அதிமுகவினர் அதிரடியாக எம்ஜிஆர் சிலையை சென்ற வருடம் கொண்டுவந்து நிறுவினார்கள். அதனைத்தொடர்ந்து கலைஞர் சிலையை இந்த மேடையில் வைக்க முறைப்படி மாவட்ட நிர்வாகத்திடம் திமுக மாவட்ட செயலாளர் முத்துச்சாமி அனுமதி கேட்டபோது, அதற்கு பதில் வராமல் இருந்தது. இந்த பின்னணியில் திடீரென சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலையை கொண்டு வந்து இந்த மேடையில் நிறுவினார்கள் ஈரோடு அதிமுகவினர். அப்போது எங்கள் தலைவர் கலைஞர் சிலையையும் இங்கு வைக்க அனுமதி வேண்டும் என திமுகவினர் போராட்டம் நடத்தியும் அனுமதி மறுக்கப்பட்டது.


இந்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர் திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி. அதிமுகவினர் ஜெயலலிதா சிலையை வைத்தாலும், அதை துணி போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். முறைப்படி திறப்புவிழா இன்னும் செய்யவில்லை இந்த சூழ்நிலையில் திடீரென ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலைஞர் சிலை பன்னீர்செல்வம் பூங்கா மேடையில் அமைக்க இன்று அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து கட்சி மேலிடத்துக்கு தகவல் கூறினார். திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி அதன்பேரில் உடனடியாக சிலையைத் திறப்போம் என திமுக தலைமையும் கூற அனுமதி வந்த இரண்டே நாளில் அதாவது 22.09.19 ஞாயிற்றுக்கிழமை மாலை கலைஞர் சிலையை பன்னீர்செல்வம் பூங்கா மேடையில் முக ஸ்டாலின் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதிரடி திருப்பமாக திமுகவினர் அமைத்த மேடையில் ஜெயலலிதா சிலையை வைத்தும் அதிமுகவினர் திறப்பு விழா செய்யப்படாமலேயே இருக்க கலைஞர் சிலை 22 ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலினால் திறப்புவிழா செய்யப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT