ADVERTISEMENT

வனத்துறை விடுதியில் பெண்ணுடன் தங்கிய வனவர்கள் சஸ்பெண்ட்!!!

05:42 PM May 11, 2020 | rajavel



இந்தியாவின் பழமையான புலிகள் காப்பகத்தின் முக்கியமானது நெல்லை மாவட்டத்தின் முண்டந்துறை மற்றும் களக்காடு புலிகள் காப்பகம். மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் அமைந்திருக்கும் இப்புலிகள் காப்பகம் அரியவகை தாவரங்கள், புலிகள், சாம்பல் நிற அணில்கள், விழிகளை விரியவைக்கும் குரங்கு இனங்கள் ஆகியவற்றை கொண்டது என்பதால் அரசின் வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின்படி, இவைகள் காப்பகமாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே விலங்குகளின் இனப்பெருக்கத்தின் கேந்திரமாக அமைந்துவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதில் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை என நான்கு வனச்சரகங்கள் வருகின்றன. இவைகளில் அம்பை வனச்சரகத்தில் எஸ்டேட்களான மாஞ்சோலை பகுதிக்கு மேலே ஊத்துப் பகுதி தொடங்கி நாலு முக்கு குதிரை வெட்டி வரையிலான சாலைகளை சீரமைக்கும் பொருட்டு வனத்துறையின் சார்பில் முதற்கட்டப்பணிகள் நடந்து வருவதால் இதற்காக அந்தப் பகுதிக்கு அம்பை வனச்சரக வனவர் முருகேசன், பாபநாச வனச்சரக வனவர் மோகன் இருவரும், வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று தற்காலிகப் பெண் பணியாளர்களை அழைத்துக் கொண்டு வாகனத்தில் சென்றுள்ளனர்.


மலைமேல் குதிரை வெட்டிப் பகுதியில் இவர்கள் அளவீடு பணிகளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குள் இரவு விழுந்துவிட்டது. எனவே இரவுச் சூழல், மலைச் சாலையில் செல்ல முடியாது என்பதால் இவர்கள் அனைவரும் அங்குள்ள வனத்துறையின் விடுதியில் தங்கிவிட்டனர். ஆனால் இந்தத் தகவலை அவர்கள் முறைப்படி வனச்சரக அலுவலகத்தில் தெரிவிக்கவில்லையாம். அதிகாரிகளின் அனுமதியின்றி இவர்கள் தங்கிய சம்பவம் விவகாரமாகியிருக்கிறது.


இதுகுறித்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொறுப்பு) கணேசன் நேரில் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார். உரிய அதிகாரிகளுக்கு முறையாகத் தெரியப்படுத்தாமல் இரவு நேரத்தில் பெண்களுடன் தங்கியதற்காக இரு வனவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தவிர தற்காலிகப் பணியாளர்களுக்குத் தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மோகன் தாஸ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இது போன்று தங்கும் சம்பவங்கள் மலைமேலுள்ள வனத்துறை விடுதியில் நடப்பதால் ஒரு கோஷ்டியை மற்றொரு கோஷ்டி காட்டிக் கொடுத்துவிட்டது. மாவட்ட அளவிலான உயர் அதிகாரி டி.டி.யின் கவனத்திற்குப் போகவே, அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்ற பேச்சும் றெக்கை கட்டுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT