ADVERTISEMENT

விலை குறைந்ததால் சாலையில் கொட்டப்பட்ட பூக்கள்; அள்ளிச் சென்ற பொதுமக்கள்

01:11 PM Oct 11, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் சாலை ஓரத்தில் பூக்களை கூடை கூடையாக வீசிச் சென்ற நிலையில் பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர். இந்த சம்பவம் ஓசூரில் நிகழ்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோஜா, சாமந்தி, பட்டன் ரோஸ், செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது. வரலட்சுமி நோன்பு, தசரா உள்ளிட்ட பண்டிகைகளின் போது பூக்களின் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் அதிக அளவில் மலர் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சாமந்தி, பட்டன் ரோஸ் ஆகிய பூக்களின் விலை கிலோ ரூ.2 ரூபாய்க்கு விற்பனைக்கு போனது. இதனால் அதிர்ந்த விவசாயிகள் பறித்த பூக்களை ஓசூர் தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள சாலையில் கொட்டி சென்றனர். இதனைக் கண்ட பொதுமக்கள் கையில் கிடைத்த பைகளில் பூக்களை அள்ளிச் சென்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT