ADVERTISEMENT

மகிழ்ச்சியை தந்த 'பூக்கள்'; ஏமாற்றத்தை தந்த 'மஞ்சள்' 

02:04 PM Jan 13, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொங்கல் நேரத்தில் பூக்கள் விலை உயர்வு வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் மஞ்சள் குலை விற்பனை இந்த வருடம் மந்தமடைந்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உடைகள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பொங்கல் பண்டிகை காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ- 3000 ரூபாய் முதல் 3,500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கனகாம்பரம்-ரூபாய் 1,300, பிச்சிப்பூ-ரூபாய் 2,000, முல்லைப்பூ-ரூபாய் 2,000, மெட்ராஸ் மல்லி-ரூபாய் 1,500, அரளிப்பூ-ரூபாய் 1,300 என விற்பனை ஆகிறது.

அதேநேரத்தில் மஞ்சள் குலைக்கு சரியான விலை கிடைக்காததது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில்தான் அதிக மஞ்சள் நடவு செய்யப்படுகிறது. மஞ்சள் 10 மாத பயிராகும். தற்பொழுது கரோனா கட்டுப்பாடு, வியாபாரிகள் குறைவு என சிக்கல்கள் உள்ள நிலையில் இந்த வருடம் விளைச்சல் அதிகம் இருந்தும் விற்பனை மந்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ள விவசாயிகள், பொங்கலுக்கு அரசு கரும்பு வழங்குவதைப் போல் இனி மஞ்சள் குலைகளையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்பில் சேர்ந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் மஞ்சள் விவசாயிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT