ADVERTISEMENT

ஐ.டி.விங்க்கில் ஐயாயிரம் பேர்...  அசத்தும் அமைச்சர்..!

08:58 PM Jun 05, 2020 | kalaimohan

ADVERTISEMENT

நவீனகால உத்திக்கு தகுந்தார்போல் அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. திராவிட முன்னேற்ற கழகம் ஐடி விங் எனப்படும் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பில் கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆளும் அதிமுக அரசில் உள்ள அமைச்சர் ஒருவர் தனது தொகுதியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இணைத்திருப்பது மிகவும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

அவர் மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சரான தங்கமணி தான். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான அவர் இன்று குமாரபாளையத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு குமாரபாளையம் தொகுதியில் உள்ளடங்கிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் இளைஞர்களை இணைத்து இருக்கிறார். அவர்களை இன்று நேரில் வரவழைத்து தகவல் தொழில்நுட்ப பிரிவில் இணைந்ததற்கான சான்றிதழை வழங்கினார். இதில் அதிமுக பள்ளிபாளையம் யூனியன் சேர்மேன் திருமதி செந்தில், மாவட்ட கவுன்சிலர் செந்தில், பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி மற்றும் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசியல்ரீதியாக அடுத்து வரும் தேர்தலில் எதிர்கொள்வதற்காக நவீனகால யுத்திகளை அறிந்து கிராமப்புறத்தில் வாழும் அ தி மு க வில் அமைச்சர் தங்கமணி இப்படி கடைபிடித்து வருவதும் அதில் தகவல் தொழில்நுட்ப பிரிவை உருவாக்கி ஐயாயிரம் இளைஞர்களை தனது தொகுதியில் மட்டும் சேர்த்தியுள்ளார். இது அரசியல் ரீதியாக செயல்படும் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT