Skip to main content

அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏ கோஷ்டி மோதல்... இரட்டை கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம்... அப்செட்டான முதல்வர்!

Published on 20/04/2020 | Edited on 20/04/2020

கட்சி தலைமையால் கட்டுப்படுத்த முடியாதபடி அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல்கள் வெடித்துக் கொண்டே இருக்கின்றன. அதன் விளைவுதான், விடிவதற்கு முன் நடந்த இரட்டைப் படுகொலை.
 

 nakkheeran app



கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, இவர் பண்ருட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, இவர் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர். அமைச்சர் சம்பத்துக்கும், கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே கோஷ்டி மோதல் இருந்துவந்துள்ளது. மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்வுகளை எம்.எல்.ஏக்களும் அவர்களின் ஆதரவாளர்களும் புறக்கணிக்கப்படுவதாகவும், அமைச்சர் தரப்புக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றும் குமுறல்கள் வெளிப்பட்டபடியே இருந்தன. திடீரென ஒருநாள் சென்னைக்கு வந்த கடலூர் மாவட்ட அ.தி.மு.கவினர், கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்திலும், முதல்வரின் க்ரீன்வேஸ் சாலை இல்லத்திற்கு அருகிலும் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக புகார் தெரிவித்தனர்.

 

admk



அமைச்சருக்கும், எம்.எல்.ஏக்களுக்குமான விரோதம் நீடித்து வருவதுபோலவே, அமைச்சர் சம்பத் ஆதரவாளர் தட்சணாமூர்த்திக்கும், எம்.எல்.ஏ சத்யா ஆதரவாளர் சக்கரவர்த்திற்கும் கடந்த பத்து வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் ஒரு மாதத்துக்கு முன்பு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம் அடைந்ததால், சுமார் 10-க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் சக்கரவர்த்தி ஆதரவாளர்களான சுண்ணாம்புகாரர் தெருவைச் சேர்ந்த ரவி மகன் மணிகண்டன்(26), மற்றும் மாரியப்பன் மகன் பாலாஜி (22) ஆகிய இருவரும் கடந்த புதன் நள்ளிரவில் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது தட்சணாமூர்த்தி ஆதரவாளர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று மணிகண்டன் மற்றும் பாலாஜியை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள். தகவலறிந்து பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

 

admk



இருதரப்பு மோதல் மற்றும் இரட்டைக்கொலையை அடுத்து அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர், தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

கரோனா ஊரடங்கினால் தமிழ்நாட்டில் வழக்கமான கொலை-கொள்ளை-வழிப்பறி போன்ற குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருக்கும் நிலையில், ஆளுங்கட்சித் தரப்பின் கோஷ்டி மோதல் பின்னணியில் பச்சைப் படுகொலைகள் நடந்திருப்பது முதல்வர் அலுவலகம் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்