ADVERTISEMENT

ஐந்து நாட்களாக கடலில் மிதந்த குடிசையில் மீனவர் தியானம்; நாகை பரபரப்பு

08:23 PM Feb 08, 2020 | kalaimohan

நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை படகுத்துறை கடற்கரைப்பகுதில் 200 மீட்டர் தொலைவில் ஒரு குடிசை மிதப்பது சாகர் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்பு போலீசாரின் கண்ணில் பட்டது.

மிதப்பது என்ன என்பதை கண்டுபிடிக்க அங்கு சென்றது கடலோர காவல்படை, அந்த மிதவைக்கு அருகில் சென்று சோதித்ததில்,பிளாஸ்டிக் பேரல்களை அடுக்காக கட்டப்பட்டு அதன் மேல் மூங்கில் மற்றும் தென்னங்கீற்றுகளால் கூரைவீடுபோல் குடில் போல் அமைக்கப்பட்டிருந்தது. அந்த மிதவைக்குடிலுக்குள் சென்ற போலீசார் அதன் உள்ளே சென்று பார்த்தபோது அதில் ஒருவர் தன்னந்தனியாக அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தியானத்தில் இருந்தவரைப்போல் இருந்தவரை எழுப்பிய போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

பிறகு என்ன நடந்தது போலீஸாரிடமமே விசாரித்தோம், "படகில் இருந்தவர் நாகூரை அடுத்துள்ள பட்டினச்சேரி மீனவர் கிராமத்தைச்சேர்ந்த கலியபெருமாள் 65 வயது இருக்கும். அவர் கடந்த 4 நாட்களாக இந்த மிதவையில் அமர்ந்து மன அமைதிக்காகவும், மீனவர் நலனுக்காகவும், தியானம் செய்வதாக கூறுகிறார். அவரை உடனடியாக கரைக்கு திரும்ப சொன்னோம் ஆனால் அதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். ஐந்தாவது நாளாக கடலிலேயே தியானம் செய்து வருகிறார். தியானம் செய்ய அவருக்கு கடலில் மிதவைக்குடில் அமைத்துக் கொடுத்தது யார், அவர் எதற்காக இந்த தியானம் மேற்கொள்கிறார். அவர் சொல்லும் காரணம் உண்மையா, அல்லது அன்னிய தொடர்புக்காக உதவுகிறாரா, கடத்தலுக்காக இதை செய்கிறாரா என பல்வேறு கோணத்தில் விசாரித்துவருகின்றோம்." என்கிறார்.

மீனவர் ஒருவர் கூறுகையில், " அவர் வீட்டில் ஏதாவது பிரச்சனையாககூட இருக்கும், மீனவர்களுக்கு கடல்தாயை தவிர பெரிய உறவு இருக்காது. அதனால் இப்படி செய்திருக்கனும், இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் நான்கு நாட்களாக ஒரு குடில் கடலில் மிதக்கிறது, அதுகூட தெரியாத நிலையில் கடலோர காவல் இருப்பது தான் வேதனை, இதையே கண்டுபிடிக்காதவர்கள் கடத்தல்களை எப்படி கண்டுபிடித்து தடுப்பாங்க," என்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT