ADVERTISEMENT

முதல்நாள் தேர்வு... 32,000 பேர் ஆப்சன்ட்... அதிர்ச்சி!

07:01 PM May 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கியுள்ள 12- ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று மொழிப்பாட தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த 8,37,317 மாணவ, மாணவியர்களில் 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT