ADVERTISEMENT

பட்டாசு வெடி விபத்து; மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு

06:37 PM Jun 02, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

சேலம் இரும்பாலை பகுதியில் இருக்கக்கூடிய சர்க்கார் கொல்லப்பட்டியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. அந்த குடோனில் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகளும் தயாரிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. முறையாக உரிமம் பெற்று இந்த பட்டாசு ஆலை செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்டோர் இந்த குடோனில் வேலை செய்துவரும் நிலையில் இன்று மாலை 4:30 மணியளவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குடோன் உரிமையாளர் சதீஷ்குமார், கடையில் பணியாற்றி வந்த நடேசன், மற்றும் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த வெடிவிபத்து தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் ஆறு வாரங்களில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT