Fireworks plant explosion ...

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

விருதுநகர் பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்புதான் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி விருதுநகர் அருகே மூலிப்பட்டியில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அதனைத்தொடர்ந்து குபேந்திரன் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை இரண்டானது. இந்நிலையில் இந்த வெடிவிபத்தில் 80 சதவிகித தீக்காயத்துடன் மீட்கப்பட்ட தெய்வேந்திரன் என்பவர் தற்பொழுது உயிரிழந்துள்ளார். இதனால் இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.