ADVERTISEMENT

இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் பெண் வேட்பாளருக்கு கிடைத்த வெற்றி!

03:19 PM Oct 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று (12.10.2021) அறிவிக்கப்பட இருக்கின்றன. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணும் பணியில் 30,245 அலுவலர்களும் பாதுகாப்புப் பணியில் 6,278 போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக பல இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.

இந்நிலையில், கடலூரில் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகூரான் உயிரிழந்த நிலையில், அந்த ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே ஊராட்சித் தலைவராக இருந்த நாகூரான் மனைவி மகாவதி உள்ளிட்ட நான்கு பேர் போட்டியிட்டனர். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் பதிவான 723 வாக்குகளில் மகாவதி 268 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கலையரசி என்ற வேட்பாளர் 266 வாக்குகள் பெற்ற நிலையில், மகாவதி இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT