ADVERTISEMENT

பிப்.13 இல் கூடுகிறது தமிழக அமைச்சரவை...

12:57 PM Feb 11, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா உட்பட 8 முக்கிய மசோதாக்கள் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. பின்னர் சட்டப்பேரவை கூட்டமானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 13-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால பட்ஜெட் குறித்து நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT