ADVERTISEMENT

இப்ப விழலாமா? அப்புறம் விழலாமா? யோசிக்கும் கட்டடம்: ஊழியர்கள் திக்... திக்....

05:19 PM May 02, 2018 | rajavel

ADVERTISEMENT


கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்தில் 138 அங்கன் வாடி மையங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், ஆதரவற்ற முதியோர்களுக்கு சாப்பாடு, ஊட்டச்சத்து மாவு என அரசு வழங்கி வருகிறது. இந்த 138 ஊட்டச்சத்து மையங்களில் 138 பணியாளர்கள், 138 உதவியாளர்கள் என சுமார் 300 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருமே பெண்கள் தான்.

ADVERTISEMENT

அங்கன்வாடி மைய பணி மட்டுமல்லாமல் மக்கள் கணக்கெடுப்பு பணி, அரசு கிராம அளவில் உள்ள கழிவுறைகளின் கணக்குகள், திருமணமான ஆண் மற்றும் பெண், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அவ்வப்போது கேட்கும் புள்ளி விபரங்களை சேகரித்து தங்கள் ஒன்றிய அலுவலங்கள் மூலம் அனுப்புக்கின்றனர்.

இவர்களுக்கான ஒன்றிய அலுவலகம் மங்களூரில் உள்ளது. இங்கு மாதம் பல கூட்டங்கள் நடைபெறுகின்றன. சத்துணவுக்கான முட்டைகள், இருபொருட்கள் சத்துமாவு என எடுத்து போக அடிக்கடி வந்து செல்வது மற்றும் மாதந்தோறும் புள்ளி விபர கணக்குகளை இங்கே தான் உட்கார்ந்து எழுதுதர வேண்டும். இப்படி பரபரப்பாக இயங்கும் அந்த அலுவலகம் ஒரு தனியார் கட்டிடத்தில் உள்ளது.

அதைவிட எல்லோருக்கும் அச்சத்தை உண்டாக்கும் வகையில், அந்த கட்டிடம் இப்ப விழலாமா? அப்புறம் விழலாமா என்ற யோசனையில் உள்ளது. இங்கு ஒரு சூப்ரண்ட், மூன்று உதவியாளர்கள் உள்ளனர். அனைவருமே தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்கிறார்கள். இங்கு கழிப்பறை வசதியும் இல்லை, மின்விசிறி வசதியும் இல்லை. கட்டிடம் ஊரின் மையப்பகுதியில் உள்ளதால் இங்கு வரும் 300 பணியாளர்களும் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் நரகவேதனைப்படுகிறார்கள். இயற்கை உபாதை கழிக்க ஊரைவிட்டு வெகுதூரம் சென்று திறந்த வெளியில் தான் கழிக்க வேண்டும். புள்ளி விபரம் எழுத போதிய இட வசதி இல்லாமல் அக்கம், பக்க வீட்டு திண்ணைகளில் உட்கார்ந்து எழுதுகிறார்கள்.

பெண்கள், குழந்தைகள், சம்பந்தப்பட்ட ஒரு ஒன்றிய அளவிலான தலைமை அலுவலகத்தின் அவநிலையை அதிகாரிகள் ஏன் கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT