ADVERTISEMENT

மகளின் திருமண கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த நேரத்திலேயே தந்தை உயிரிழப்பு!

08:58 PM May 27, 2019 | kalaimohan

நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான அமரம் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற சோகப் பாடல் ஒன்றை சொந்த மகளின் திருமண கச்சேரியில் உருக்கமாக பாடிக்கொண்டிருந்த 56 வயது விஷ்ணு பிரசாத் என்ற காவல் உதவி ஆய்வாளர் பாடிக்கொண்டிருக்கும் மேடையிலேயே சடீரென்று எதிர்பாராத விதமாக கீழே விழுந்து இறந்த சம்பவம் மற்றும் அவர் மேடையில் விழும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவனந்தபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் விஷ்ணு பிரசாத். கொல்லம் மாவட்டம் நீண்டஹர பகுதியில் தனது மகளுக்கு திருமண விழாவை நடத்தினார். திருமண மேடைக்கு அருகில் உள்ள மேடையில் மேடைக் கச்சேரி நடைபெற்றது. அதில் அமரம் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ''இராக்கிளி பொன்மகளே'' என்ற பாடலை உருக்கமாக பாடிக் கொண்டிருந்தார்.

பாடிக்கொண்டிருந்த காவல் ஆய்வாளர் விஷ்ணு பிரசாத் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக மேடையிலேயே மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு விஷ்ணு பிரசாத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் இறந்ததற்கு காரணம் மாரடைப்பு எனவும் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தந்தை இறந்த தகவலை மகளுக்கு தெரிவிக்காமல் அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறி சமாளித்து திருமணத்தை நடத்தினர்.

திருமணம் நடந்து முடிந்த பின்னர் மகளிடம் உண்மையை தெரிவித்தனர். தனது தந்தையின் மரணத்தை அறிந்து விஷ்ணு பிரசாத் மகள் கதறி அழுதார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. திருமண நாளிலேயே தந்தையை இழந்த அந்தப் பெண் கதறியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT