ADVERTISEMENT

பயிர்க் காப்பீடு அரசாணை தாமதமாக வெளியானதால் விவசாயிகள் கவலை! 

11:26 AM Oct 30, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


அரியலூர் மாவட்டத்தில், 2020-க்கான ராபி பருவத்தில், 29, 30, 31 அக்டோபருக்குள் மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கு, மத்திய அரசு அதிகாரிகள் அவகாசம் கொடுத்துள்ளனர்.

ADVERTISEMENT


இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் நிலைமையைப் பற்றியும் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் எதுவும் தெரியாமல் விவசாயிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே மத்திய அரசு வெளியிட்டுள்ள பயிர்க்காப்பீடு செய்வதற்கான அரசாணை உள்ளது.


கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கால அவகாசத்தை தராமல் அரசாணை வெளியிட்டிருப்பதற்கு விவசாயிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறோம். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், அரியலூர் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் காப்பீட்டுக்கான பொறுப்பு அதிகாரிகளுக்கும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.


கடந்த முறை கால அவகாசம் கேட்டபோது, மத்திய அரசு அதிகாரிகள் கால அவகாசத்தை நீட்டிக்க மறுப்புத் தெரிவித்தனர். தங்களது கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் ரத்னாவின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம் என்று கூறி உள்ளனர். விவசாயிகள், விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நேரம் என்பதால், விவசாயிகள்,வி.ஏ.ஓ அலுவலகம் சென்று அடங்கல் வாங்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. கரோனா காலத்தில் வி.ஏ.ஓ அலுவலகம் செல்லும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


மேலும், பொது சேவை மையங்களில் பதிவு செய்யச் சென்றால் நெட்வொர்க் பழுது, தாமதம் உள்ளிட்ட பல்வேறு இடர்ப்பாடுகள் இருக்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ஏற்படும் நடைமுறை பிரச்சனைகளை கருத்தில்கொண்டு பயிர்க்காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை 10 நாட்களாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம். அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டம் செய்வோம் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT