Skip to main content

மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாடு!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

Demand Conference on behalf of the People's Good Governance Federation

 

அரியலூர் மாவட்டம் அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பு சார்பிலும் புதிய தலைமுறை மக்கள் கட்சி சார்பிலும் பாரம்பரிய அரிசி வகைகளை ரேசன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு களம் கண்ட அமைப்பு சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் 200 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

 

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தமிழக மக்கள் நல்லாட்சி கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளரும், அரியலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான தங்க சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாசித்தார். மேலும், கோரிக்கை மாநாட்டில் கோரிக்கைகள் அடங்கிய மலரை தமிழ்க்களம் அரங்கநாடன் வெளியிட, கூட்டமைப்பின் குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ம. இராவணன் பெற்றுக்கொண்டார். மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி பாக்கியராஜ், தஞ்சையைச் சேர்ந்த பனசை அரங்கன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

 

மேலும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களான, ‘நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 30/- விவசாயிகளிடம் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும்; இறக்குமதி வரி இல்லாமல் 25 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் தமிழ்நாடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்; தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து அரசுப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கும் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பைக், சைக்கிள், மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்’ உள்ளிட்ட 200 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Cauvery Water Management Committee orders to open water to TN

காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக தமிழகம் கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சனையை தீர்த்து வைக்க மத்திய அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று (11.07.2024) நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு தரப்பில், “கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உரிய கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான நீரை உரிய முறையில் திறந்து விடவில்லை. அதோடு இந்த ஆண்டு கர்நாடகாவில் வழக்கமான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. ஆனாலும் கூட கர்நாடக அரசு சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காமல் இருப்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறும் செயல். ஆகவே தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

கர்நாடக அரசோ வழக்கம் போல தங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது போன்ற கருத்துகளை முன் வைத்தனர். இதனையடுத்து காவிரி ஒழுங்காற்று குழு, “தமிழகத்திற்கு நாளை (12.07.2024) முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள் தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு செல்லும் நீரின் அளவு 1 டிஎம்சியாக இருப்பதை கர்நாடக அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘உயிரிழப்பு அதிகரிப்பு’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Kallakurichi Karunapuram incident CM MK Stalin discussion

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய  தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாகத் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

Kallakurichi Karunapuram incident CM MK Stalin discussion

இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சட்டமன்ற கூட்டத்தொடர் கூடும் முன்பு உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் குழுவினர் எடுத்துக் கூற உள்ளனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான பதிலளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.