ADVERTISEMENT

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள்... பாதுகாப்பு பணியில் அதிவிரைவு படை போலீசார்..!

12:47 PM Jan 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து தவறான முறையில் கணக்கெடுப்பை நடத்தும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து, அழுகிய நெற்பயிர்களோடு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரலாறு காணாத தொடர்மழையால் டெல்டா மாவட்டங்களின் நெற்பயிர்கள் தண்ணீரில் முழுகி நாசமாகின. இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் பல இடங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நெற்பயிர் பாதிப்புகளைக் கணக்கெடுக்கும் பணிகளைக் காப்பீட்டு குழுவினர் செய்து வருகின்றனர். அவர்கள் தவறான முறையில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர் என கணக்கெடுப்பு நடத்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் கண்டித்தும், வேளாண்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள், ‘டெல்டா மாவட்டங்களைப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும்’ என அழுகிய நெற்பயிர்களோடு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.

விவசாயிகளின் போராட்டம் கரணமாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட அதிவிரைவுப் படை போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT