ADVERTISEMENT

வெற்றிலை விலை திடீர் குறைவால் விவசாயிகள் அதிர்ச்சி!

10:12 AM Apr 25, 2019 | Anonymous (not verified)

கரூர் மாவட்டத்தில் குளித்தலை, லாலாப்பேட்டை, வேலாயுதம்பாளையம், புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வெற்றிலை ஏற்றுமதியாகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் வெற்றிலை 100 கவுளி கொண்ட ஒரு மூட்டை ரூ.2500ல் இருந்து ரூ.2,200க்கு குறைந்து விற்பனையாகிறது. வெற்றிலை விலை குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மகாதானபுரம், மகிளிபட்டி, லாலாப்பேட்டை, திருக்காம்புலியூர், உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் விளையும் வெற்றிலைகள் கரூர் திருச்சி வெற்றிலை மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வாரம் வெற்றிலை விற்பனை விலை சரிந்துள்ளது. 100கவுளி கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை விலை ரூ.2500ல் இருந்து ரூ.2200 ஆக குறைந்துவிட்டது. மூட்டைக்கு ரூ.300 விலை குறைந்து விட்டதால் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT