ADVERTISEMENT

கஸ்டமரிடம் கள்ளநோட்டு கொடுத்து புழக்கத்தில் விட்ட பெண் உட்பட 4வர் கைது..!!!

08:46 AM Feb 06, 2019 | nagendran

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் கள்ளநோட்டுக்களை கொடுத்து, குறிப்பிட்ட சதவிகித கமிஷன் தருவதாகக் கூறி புழக்கத்தில் விட்ட பெண் மற்றும் அவருக்கு உதவிய மூன்று நபர்களை கைது செய்துள்ளது காரைக்குடி வடக்குக் காவல்துறை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி, கண்கொத்திப் பாம்பாக கள்ள நோட்டு புழக்கத்தினை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர் காரைக்குடி தனிப்பிரிவுப் போலீசார். இவ்வேளையில், காரைக்குடி இடையர் தெரு பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம் நடத்தி வந்தவரிடம், தனது இரு சக்கர வாகனத்தை கொடுத்து பழுது நீக்கிப் பெற்றதற்காக ரூ.100 தாள்கள் 3ஐ (ரூ.300ஐ) கட்டணமாக கொடுத்திருக்கின்றார் சூடாமணிபுரத்தினை சேர்ந்த சேதுபதி.. தனக்கு கிடைத்தக் கட்டணமாக ரூ.300ம் சந்தேகத்திற்கிடமாக இருக்கவே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் மெக்கானிக் முரளி. அந்த கள்ள நோட்டுக்களை வைத்து சேதுபதியினை கஸ்டடிக்கு எடுத்து விசாரிக்கவே பெண் உட்பட மொத்தமாக நால்வர் சிக்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து ரூ. 94 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளையும், ரூ. 22 லட்சம் குழந்தைகள் விளையாடும் நோட்டுகள் பறிமுதல் செய்த போலீசார் கள்ளநோட்டுக்கள் புழக்கத்தில் வந்த கதையோ சுவாரசியமானது.

போலீசாரிடம் சிக்கிக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இலுப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, குன்றக்குடி சிவரஞ்சனி, நாகப்பன்பட்டி சின்னையா, காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்த சேதுபதி ஆகியோரில்சி.பி.சி.ஐ.டி.வழக்குடன் மூன்று வழக்குகள் உள்ள கிருஷ்ணமூர்த்தி தான் இதற்குத் தலைமையே.! குன்றக்குடியை சேர்ந்த பாலியல் தொழிலாளி சிவரஞ்சனிக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் தொடர்பு ஏற்பட அவரின் மூலம் கள்ள நோட்டுக்கள் குன்றக்குடிக்கு அனுப்பட, தன்னை நாடிவரும் கஸ்டமர்களிடம் கள்ளநோட்டுக்களை கொடுத்து புழக்கத்தில் விட்டுள்ளார் சிவரஞ்சனி. இதனை சேதுபதி ஒத்துக்கொள்ள அவர் மூலமே அனைவரும் பிடிப்பட்டனர் என்கிறது போலீஸ் குறிப்பு. கள்ளநோட்டுக்கும்பலை கைது செய்த காரைக்குடி வடக்கு காவல்துறைக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளது. நீங்களும் வாழ்த்துங்களேன்..!!!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT