
அனுமதியின்றி பள்ளிவாசல் கட்டுவதாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவினரை அனுப்பி வைத்த சம்பவம் சிவகங்கையில் நிகழ்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உரிய அனுமதியின்றி பள்ளிவாசல் கட்டப்படுவதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரியக்குடி சீனிவாசன் நகர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அந்த பள்ளிவாசல் வரும் திங்கட்கிழமை திறக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிவாசல் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)