ADVERTISEMENT

வாரிசு சான்றிதழ் கொடுத்ததில் மோசடி!! தாசில்தார், வி.ஏ.ஓ., ஆர்.ஐ. ஆகியோர் மீது வழக்கு... 

02:28 PM Aug 13, 2020 | rajavel

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்த நூரை சேர்ந்த ராமலிங்கம் மனைவி பொன்னம்மாள், வயது 86. இவர் கடந்த பத்தாம் தேதி மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

ADVERTISEMENT

அந்த புகாரில் தனது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். எங்களுக்கு பிறந்த பெண் குழந்தையும் இளம் வயதில் இறந்து விட்டது. இதனால் எங்களின் உறவினர் மகன் தனசேகரன் என்பவரை எங்கள் குல வழக்கப்படியும் சட்டத்தின்படியும் எங்கள் மகனாகதத்தெடுத்து சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்து அவரை வளர்த்து வருகிறேன்.

எனது குடும்ப சொத்தானது பாணம் பட்டு கிராமத்தில் ஐந்து சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். என் கணவரின் இறப்புக்கு பின் எனது மகன் தனசேகரன் பெயருக்கு அடிப்படையில் பட்டாவை மாற்றி ஆவணப்படுத்தி அந்த இடத்திற்கு தீர்வை செலுத்தி வந்துள்ளோம். எனது மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார். தனசேகரன் இதனால் எங்களூரில் வசித்து வரும் சுந்தர்ராஜன் என்பவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். எனக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் போதெல்லாம் சுந்தரராஜன் மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுப்பார். அவர் அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்வார். அவர் ஒரு அரசு ஊழியர் என்பதால் அரசு விவசாய காப்பீட்டுத் திட்டங்களில் சேரச் சொல்லி என்னையும் சேர்த்து விட்டார். இப்படி எங்கள் குடும்ப நண்பராக பழகிய சுந்தரராஜன் 2016 ஆம் ஆண்டு விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு என்னை அழைத்து சென்று பாணம் பட்டு இடத்து சொத்தை போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னை ஏமாற்றிக் கையெழுத்து வாங்கி அந்த இடத்தை அவரது பெயரில் மாற்றி கொண்டுவிட்டார்.

வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு மாதம் ஊருக்கு வந்த பிறகுதான் இந்த விவரம் எனக்கு தெரிய வந்தது. எனக்கு என் மகன் தனசேகரன் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. சுந்தர்ராஜன் பொய்யாக ஒரு வாரிசு சான்றிதழை பெற்றுள்ளார். இதற்கு அப்போதைய விழுப்புரம் தாசில்தார் மூலம் வாரிசு சான்று பெற்று அதை கொண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக என்னை நம்ப வைத்து எனது சொத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னம்மாள் அவரது புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி நிலமோசடி செய்தது தொடர்பாக சுந்தரராஜன் அப்போதைய விழுப்புரம் தாசில்தார் வளவனூர் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆவண எழுத்தர் சம்பத்குமார் சாட்சியாக உடனிருந்து கையெழுத்திட்ட அகரம் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் கோலியனூர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மீதும் மோசடி உள்ளி ஏழு பேர்கள் மீது 5 சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நில மோசடி உடந்தையாக வாரிசு சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர் உட்பட வருவாய்த் துறையினர் பெரும் மோசடியில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT