Skip to main content

கார் டயர் வெடித்துச் சிதறி விபத்து; இருவர் உயிரிழப்பு

 

Car tire burst accident; Two people died

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதியதில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது சித்தாநல்லூர் கிராமம். இந்த கிராமம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் 5 பேர் காரில் சொந்த ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்கார்பியோ காரின் முன்பக்க டயர் வெடித்து சிதறியது. இதில் கார் சாலை தடுப்பின் மீது மோதி எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பிரிட்டோ மேரி, சகாயராஜ் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவெண்ணைநல்லூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !