ADVERTISEMENT

ராமஜெயம் கொலை வழக்கு; உண்மை கண்டறியும் சோதனை

11:59 AM Jan 18, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கே.என்.ராமஜெயம் கொலைவழக்கு தொடர்பாக 4 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியான திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைவழக்கு குறித்து தற்போது எஸ்.பி. ஜெயகுமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல்துறையினர் இந்தக் கொலைவழக்கு தொடர்பாக சந்தேகத்திற்குரிய மற்றும் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி ஜே.எம்-6 நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு செய்தனர். இதில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதி சிவகுமார் அனுமதி அளித்தார்.

அதன்பேரில், சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் ஆகிய 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு அனுமதி கேட்டு டெல்லியில் உள்ள ஆய்வகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இன்று முதல் 12 ரவுடிகளிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து வருகை தந்துள்ள தடயவியல் துறை நிபுணர்கள் இந்தச் சோதனையை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT