ADVERTISEMENT

அதி தீவிரப் புயலானது 'நிவர்'... 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

04:54 PM Nov 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தீவிரப் புயலாக இருந்த 'நிவர்' தற்போது அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'நிவர்' புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக புயல் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 270 கிலோ மீட்டரும், புதுச்சேரியிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவிலும் அதி தீவிரப் புயல் நிலை கொண்டிருக்கிறது. இதனால், அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு வினாடிக்கு 1,500 கனஅடியாக திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதி தீவிரப் புயலாக மாறிய நிவரின் வெளிவட்டச் சுற்று, கடலூர் மாவட்டத்தின் கரையைத் தொட்டதாக தற்போது அண்மைத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT