ADVERTISEMENT

"பொறியியல், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு"- அமைச்சர் பொன்முடி பேட்டி! 

12:58 PM Jul 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (08/07/2022) காலை 11.30 மணியளவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் "பொறியியல் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 12- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு வெளியான பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்க ஐந்து நாட்கள் வரை அவகாசம் தரப்படும். ரூபாய் 1,000 மாத உதவித்தொகை திட்டத்துக்கு இதுவரை இரண்டு லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

பொறியியல் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். சி.பி.எஸ்.சி. மாணவர்கள் விண்ணப்பித்த பிறகு கல்லூரிக்கான இடங்களை முடிவு செய்து வெளியிடப்படும். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT