ADVERTISEMENT

சென்னை மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு

07:55 PM Oct 12, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் விளையாடவுள்ள போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 13 (13.10.2023) ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதன்படி, போட்டியினைப் பார்த்துவிட்டுத் திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை வழக்கத்தை விடவும் கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது, இரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம். அதே சமயம் போட்டியைக் காண மைதானத்திற்குச் செல்லும்போது, இச்சலுகை பொருந்தாது என்பதையும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி நீலவழித்தடத்தில் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையானது பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும். அதேபோன்று பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். மேலும் போட்டி நாளன்று (13.10.2023) இரவு 11.00 மணி முதல் - 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான ரயில் சேவை இயக்கப்படாது என்பதையும் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT