ADVERTISEMENT

சத்துமாவு கஞ்சியில் பல்லியா? 29 பேர் மயக்கம்... நெய்க்குப்பியில் பரபரப்பு! 

08:37 PM May 27, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரத்தில் அங்கன்வாடியில் கொடுக்கப்பட்ட சத்துணவு கஞ்சியில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில், 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த நெய்குப்பி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாவு கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். வழக்கம் போல் இன்றும் சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. அதனை குடித்த 13 குழந்தைகள் உட்பட 29 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக 29 பேரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் 29 பேரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். சத்துமாவுக் கஞ்சியல் பல்லி விழுந்ததாக தகவல்கள் வெளியாகி அது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT