ADVERTISEMENT

ஈவிகேஎஸ் போட்ட குண்டு - அதிர்ச்சியில் ஓபிஎஸ் மகன்

03:54 PM May 26, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் சென்னையில் இன்று செய்தி யாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர், ’’நாடு முழுவதும் அதிகார பலம், பண பலத்தால் மோடி வெற்றி பெறுள்ளார். தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அதிகாரபலம், பணபலத்தால் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேனி தொகுதியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில ஆதாரங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எந்தெந்த ஆதாரங்களோடு வழக்கு தொடரலாம் என்று வக்கீல்களுடன் கலந்தாலோசித்துக்கொண்டு இருக்கிறோம். வழக்கு போட இன்னும் 25 நாட்கள் அவகாசம் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் வழக்கு போடுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுப்போம்.

வாக்கு எண்ணிக்கையின் போது பல மின்னணு எந்திரங்களில் சீல் இல்லை. கேட்டால் அரக்கு 1 மாதத்தில் உருகலாம் என்கிறார்கள். சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள். மதுரை வாக்குச் சாவடியில் இருந்த பெட்டி தேனி பாராளுமன்ற தொகுதியில் இருக்கிறது. இதுபோலபல வி‌ஷயங்கள் முறைகேடாக நடந்திருக்கின்றன. இதுதொடர்பாக வக்கீல்களோடு கலந்து ஆலோசித்து கண்டிப்பாக நான் வழக்கு தொடர இருக்கிறேன்’’என்று தெரிவித்தார்.


இதையடுத்து, ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர இருக்கிறீர்களா? தேர்தல் ஆணைய முறைகேடுகளை பற்றி வழக்கு தொடர இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, இரண்டும் ஒன்று தானே. அவர் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததை பற்றித்தான் வழக்கு தொடர இருக்கிறேன் என்றார்.

ஈவிகேஎஸ் போட்ட இந்த குண்டு, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிர வைத்திருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT