ADVERTISEMENT

எங்கே அந்த மூன்று கவுன்சிலர்கள்... ர.ர.க்கள் புலம்பல்...!

11:10 PM Mar 04, 2020 | Anonymous (not verified)

ஜனவரி மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு நடைபெறும் மறைமுக தேர்தல் இதுவரை மூன்றாவது முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு மொத்தம் 6 கவுன்சிலர் பதவிகள். இதில் 3 பேர் திமுக 3 பேர் அதிமுக என சமமாக வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக உறுப்பினர்கள் 3 பேரும் ஆஜராகியிருந்தனர். ஆனால் அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் வரவில்லை. அப்போது அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் ஆஜரானால் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும்.

ஆனால் அதிமுக வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான் என நினைத்தனர். அதிமுக நிர்வாகிகள் காரணம் வெற்றி பெற்ற மூன்று பேரில் இரண்டு பேர் திமுகவுக்கு சாதகமான மனநிலையில் இருந்ததால் அந்த மூன்று கவுன்சிலர்களும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் எங்கேயோ கபத்தி கொண்டு போய் விட்டனர். இந்த நிலையில் அடுத்து ஜனவரி இறுதியில் நடைபெற்ற மறைமுக தேர்தலிலும் அந்த மூன்று பேரையும் ஆஜர் செய்யவில்லை. தொடர்ந்து இன்று நடைபெற்ற தேர்தலிலும் அந்த மூன்று பேரும் வரவில்லை. திமுக உறுப்பினர்கள் மூன்று பேர் மட்டும்தான் வந்திருந்தனர்.

இந்த முறையும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அடுத்த நான்காம் முறை எத்தனை பேர் வந்தாலும் குலுக்கல் முறையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்து விட்டனர். இந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் 3 பேரின் கதி என்ன அவர்களை எங்கே அடைத்து வைத்திருக்கிறார்கள் என அதிமுகவை சேர்ந்த தொண்டர்கள் பரிதாபமாக கூறினார்கள்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT