ADVERTISEMENT

கால்பந்தாட்ட வீரர் மரடோனாவுக்கு ஈரோட்டில் அஞ்சலி...!

05:03 PM Nov 28, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கால்பந்தாட்ட வீரர் டியேகோ மரடோனா உடல் நலக்குறைவு காரணமாக, சென்ற 25 -ஆம் தேதி இறந்துவிட்டார். இதனால், உலகம் முழுதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மரடோனா, கால்பந்தாட்ட வீரர் மட்டுமல்ல உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். அதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். கம்யூனிஸ்ட் இயக்கப் புரட்சியாளர்களான சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் கருத்துகளை, கொள்கைகளை பின்தொடர்ந்ததோடு மக்களிடமும் பிரச்சாரம் செய்தார். அதே போல் போர் முறையை எதிர்த்து, உலக சமதானத்தை விரும்பினார்.


அப்படிப்பட்ட மரடோனாவின் மறைவுக்கு, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறது. ஈரோடு மாணிக்கம் பாளையத்தில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் (ஏ.ஐ.வொய்.எப்) சார்பில், மரடோனா படத்திற்கு 28 -ஆம் தேதி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, பெருமன்றத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் கலந்து கொண்டு, மரடோனாவின் பண்புகளைப் பாராட்டிப் பேசினார். இதில், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT