ADVERTISEMENT

அவசர செயற்குழு கூட்டம்; தேதியை அறிவித்த அதிமுக

10:47 AM Apr 06, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தொடங்கி பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக நிலைநிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தார். தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்த மனுக்களின் விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு கோரிய இடைக்காலத் தடை என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இறுதி விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் வரும் 7 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என அதிமுக அறிவித்தது. இந்நிலையில் மறு அறிவிப்பாக வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடக பொதுத்தேர்தல், அதிமுகவிற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்டவை பற்றி விவாதிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT