ADVERTISEMENT

சூளகிரி வனப்பகுதியை மையம் கொண்ட யானைகள்; விவசாயிகள் கவலை!

08:19 AM Apr 19, 2020 | kalaimohan

ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை பகுதிகளில் இருந்து 13 யானைகள் ஓசூர் அருகே சூளகிரியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதால், கோடை உழவைத் தொடங்கியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகம் சானமாவு பகுதிகளில் சுற்றித்திரிந்த முப்பதுக்கும் மேற்பட்ட யானைகள், கடந்த 6 மாதங்களுக்கு முன் தமி-ழக எல்லையை கடந்து கர்நாடகா மாநிலத்திற்குச் சென்றன. அந்த யானைகள் கோலார், முளுபாகலு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளில் சுற்றி வந்தன. தற்போது ஆந்திரா, கர்நாடகா மாநில வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

ADVERTISEMENT


இதனால் அங்கு சுற்றித்திரிந்த யானைக்கூட்டம் இரண்டு, மூன்று குழுக்களாக பிரிந்து உணவு, தண்ணீர் தேடி தமிழக வனப்பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டன.

இந்நிலையில் நேற்று காலை ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறிய 13 யானைகள், சூளகிரி அருகே நீலவங்கா கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

தற்போது ஓசூர் பகுதியில் கோடை மழை பெய்துள்ளதால், கோடை உழவுப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த சமயத்தில் யானைகள் கூட்டம் வந்துள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து கண்காணித்து வருகின்றனர். பொதுமக்களும், விவசாயிகளும் வனப்பகுதிக்குள் தனியாகச் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT