style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஓசூர் சானமாவு வனப்பகுதியில் சுமார் 50 மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டமாக சாலையை கடந்துசென்ற பொழுது அக்கம் பக்கத்திலிருந்த இளைஞர்கள் கூச்சலிட்டபடி கற்களால் யானைகளை தாக்கிய சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பண்ணாகட்டாவிலிருந்து 200க்கும் மேற்பட்டகாட்டு யானைகள் அடிக்கடிகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு, தேன்கனிகோட்டை, ஜவளகிரி, தளி ஒட்டிய வன பகுதிகளில் சுற்றிவருகின்றன. இந்நிலையில் இன்று சானமாவு வனப்பகுதிக்கு வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் ஒரு சாலையை கடக்க முயன்றன.அப்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் கூச்சலிட்டபடி கீழே கிடந்த கற்களை எடுத்து யானைகளை நோக்கி வீசி தாக்கினர். கூச்சல் மற்றும் கல்லெறிதலால் பயந்த யானைகள் சர சரவென்று அணியாக காட்டிற்குள் ஓடியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக, காட்டு யானைகளை இப்படி கற்களால் தாக்கிய நிகழ்விற்கு வன விலங்கு ஆர்வலர்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். வன விலங்குகள் ஊருக்குள் வந்தால் அதுவும் குறிப்பாகயானைகள் வந்தால் அவற்றை துரத்த பட்டாசு வெடிக்க வேண்டும் அல்லது வன துறைக்கு தகவலளிக்க வேண்டுமே தவிர இப்படி விலங்குகளை அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என்கிறது வனத்துறை.
,