ADVERTISEMENT

ட்ரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்தடிக்கும் சோதனை ஓட்டம்!

08:35 PM Apr 29, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன், தனியார் நிறுவனம் உருவாக்கிய ஆளில்லா விமானத்தின் மூலம், விவசாய பயிர்களுக்கு மருந்தடிக்கும் முதற்கட்ட பரிசோதனை நடைபெற்றது.

முதற்கட்ட பரிசோதனையானது, வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள முந்திரி பண்ணையில், அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளை மேம்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானத்தின் மூலம் 6 நிமிடத்தில் ஒரு ஏக்கர் பயிர்களுக்கு மருந்தடிக்க முடியும் என்பதால், ஒரு நாளைக்கு 25 ஏக்கர் பரப்பளவில் விவசாய பயிர்களுக்கு ஏற்றது போல் மருந்து அடிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ட்ரோன் எனப்படும் இந்த ஆளில்லா விமானம் மூலம் நெல், மக்காச்சோளம், எள் போன்ற தாணிய வகை பயிர்கள் தென்னை மரம், மாமரம், பாலா, முந்திரி உள்ளிட்ட மர வகை சாகுபடி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகை பயிர்கள் என அனைத்து வகையிலான விவசாய உற்பத்திகளுக்கும், தண்ணீரை கலந்து பயன்படுத்தக்கூடிய, இயற்கை மற்றும் செயற்கை ரசாயன மருந்துகளை பயன்படுத்தி மருந்து தெளிக்க முடியும் என்றும், இதனால் ஆள் பற்றாக்குறை, நேரச் செலவு, குறைவான மருந்துகள் என அனைத்து வகையிலும் சிக்கனப்படுத்த முடியுமென்றும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நடைபெற்ற சோதனை ஓட்டம் முடிவடைந்த பின்பு, அடுத்த கட்டமாக விவசாயகளின் விவசாயத்திற்கு நேரடியாக சென்று, ஆளில்லா விமானம் கொண்டு, இயற்கை மற்றும் செயற்கை மருந்துகளை அடிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT