cuddalore kullanchavadi village husband and wife incident with her friends involved

Advertisment

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த த.பாளையம் பொன்னையன் குப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவரது வயலில் நேற்று முன்தினம் (31.05.2023) காலையில் வேலைக்கு சென்றவர்கள் அப்பகுதியில் பயங்கரமாக துர்நாற்றம் வீசுவதை அறிந்து துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என தேடிப் பார்க்கும் போது ஒரு ஆண் சடலம் இறந்து அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் ரங்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர்குள்ளஞ்சாவடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குள்ளஞ்சாவடி போலீசார் பிரேதத்தை கைப்பற்றினர்.மேலும் கடலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள்,மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.

மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் வடலூர் பார்வதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்த மணி என்பவரது மகன் ராஜசேகர் (வயது 34) என்பதும், அவர் கட்டிட வேலை வேலை செய்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் இருப்பதும் தெரியவந்தது. மேலும் மஞ்சுளா கோடை விடுமுறையில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடலூர் பச்சங்குப்பத்தில் உள்ள தனது அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு ராஜசேகர் அவருடைய அம்மாவிடம் ' கடலூரில் உள்ள மனைவி, பிள்ளைகளை பார்த்து வருகிறேன்' என கூறிவிட்டு வடலூரில் உள்ள பைக் ஸ்டேண்டில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் 3 நாட்களாக வீட்டுக்கு வரமால் இருந்த மகன் கரும்புத் தோட்டத்தில் இறந்து கிடக்கிறார் என்ற தகவல் தெரியவரவே ராஜசேகரின் தாயார் பானுமதி, 'தன் மகன் சாவில் சந்தேகம்' இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? தற்கொலையா? இல்லை வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

cuddalore kullanchavadi village husband and wife incident with her friends involved

இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு ராஜசேகரின் மனைவி மஞ்சுளாவை நேற்று காலை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் மஞ்சுளாவிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராஜசேகரும், மஞ்சுளாவும் காதலித்துகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு 3 பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தனர். ராஜசேகருக்கு அதிகப்படியான குடிப்பழக்கமும், வேறு பெண்களுடன் தகாத உறவுகளும் இருந்துள்ளது. மேலும் மஞ்சுளாவின் விருப்பத்துக்கு மாறாக அவரிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மஞ்சுளா பலமுறை தனது கணவரிடம் எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை. மேலும் அடிக்கடி மது அருந்திவிட்டு அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இதனால் ராஜசேகரின் செயல்பாடுகள் பிடிக்காமல் தாய் வீட்டில் இருந்து வந்த மஞ்சுளா தனது நெருங்கிய தோழியான தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வினோதினியிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மஞ்சுளா, வினோதினி இருவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய முடிவு செய்து வினோதினி கணவர்சசிக்குமாரிடம் கூறினர். இதையடுத்துஉதவிக்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த நடராஜ் மகன் மோகன் (வயது32) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டி சேடப்பாளையத்தில் உள்ள மருந்து கடையில் களைக்கொல்லி மருந்து வாங்கி, மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து விடலாம் என திட்டம் தீட்டினர். இதையடுத்து கடந்த 27_ஆம் தேதி மஞ்சுளா ராஜசேகருக்கு போன் செய்து தொண்டமாநத்தத்தில் உள்ள வினோதினி வீட்டிற்கு வரவழைத்து சசிக்குமார், மோகன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த மது பாட்டிலில் விஷம் கலந்து த.பாளையம் கிராமம் அருகே உள்ள பொன்னையன் குப்பத்தில் கரும்பு தோட்டத்திற்கு ராஜசேகரை அழைத்துச் சென்று இவர்கள் இருவரும் குடிப்பது போன்று நடித்து ராஜசேகரை குடிக்க வைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்த ராஜசேகர் இறந்ததை உறுதி செய்து கரும்புத் தோட்டத்திற்குள் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றனர்.

Advertisment

cuddalore kullanchavadi village husband and wife incident with her friends involved

இதுகுறித்து குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், மற்றும் போலீசார் ராஜசேகர் மனைவி மஞ்சுளா(32), இவரது தோழி வினோதினி (30), வினோதினியின் கணவர் சசிக்குமார்(39), இவர்களது நண்பர் நடராஜ் மகன் மோகன்(32) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கூட்டாளிகளுடன் சேர்ந்து கணவரை மனைவி கொலை செய்த சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.