ADVERTISEMENT

''இனி 'மை லார்ட்' வேண்டாம்... சார் மட்டும் சொல்லுங்க...'' - தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

08:53 AM Feb 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீதிமன்றத்தில் 'மை லார்ட்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். இயல்பாக சார் என்றே சொன்னாலே போதும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

காலனித்துவ, நிலப்பிரபுத்துவ முறையைக் குறிக்கும் ‘மை லார்ட்’, ‘லார்ட்ஷிப்’ என நீதிபதிகளை அழைக்கும் முறையைக் கைவிட வேண்டும் என விருதுநகர் திருச்சுழியூரில் நடைபெற்ற முன்சீப், நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழாவில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பேசினார். மேலும், மரியாதை நிமித்தமாக அழைக்கக்கூடிய ‘சார்’ என்று சொன்னாலே போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT