சுய தனிமைப்படுத்துதல் சிறை வாசம் அல்ல; கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி எழுதியுள்ள கடிதத்தில், ‘அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையைப் போராடி மீட்க வேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூறினார். நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காமல், நாட்டுக்காக நீ என்ன செய்தாய்? என்று கேட்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி கூறியிருக்கிறார். கரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதியேற்போம். கனவிலும் காண முடியாத சவாலான நிலையை எதிர்கொண்டுள்ளோம். இதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

Advertisment

 Self-isolation is not imprisonment; Corona for the release! Letter to the Chief Justice of the high Court!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும், இன்று போல் நாளையும், அச்சமூட்டும் வகையில் சூழல் மாற வாய்ப்புள்ளதால், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துகொள்ளும் பணியில் இறங்க வேண்டும். சமூக இடைவெளியை போதிப்பதோடு நிறுத்தாமல், அனைவரும் உண்மையாக கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கையாள்வது விகாரமாக இருந்தாலும், மற்றவர்களின் நலனுக்காக அதைக் கடைபிடிக்க வேண்டும்.

Advertisment

மத்திய அரசின் சுய தனிமைப்படுத்தல் உத்தரவை, சிறை வாசம் என்றோ கூண்டில் அடைக்கப்படுவதாகவோ கருதாமல், கரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என எண்ண வேண்டும். விடியும் பொழுது, நமக்கு வெற்றி தருவதாக அமையட்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.