ADVERTISEMENT

செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பாரம்பரிய நாட்டின வகை நாய்கள்

09:08 PM Jun 17, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கோவையில் நடைபெற்ற செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பாரம்பரிய நாட்டின வகை நாய்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ADVERTISEMENT

கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் ஆனைமலை கெனல் கிளப் சார்பில் இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 450 நாய்கள் கலந்து கொண்டன. மேலும் இந்த நாய்கள் கண்காட்சியில் ஜெர்மன் செப்பர்ட், கிரேட் டேன், பாக்ஸர், புள் டாக், டால்மேசன், கிரெடவுன், புல் மாஸ்டிப், ஜெர்மன் செப்பர்ட், உட்பட நாயகள் கலந்து கொண்டன. மேலும் இந்த கண்காட்சியில் சென்னையை சேர்ந்த ப்ரீத்தம் பெங்களூர் பகுதியை சேர்ந்த யசோதா மற்றும் மார்ட்டின் நடுவர்களாக உள்ளார்கள்.


இந்திய அளவில் தமிழ்நாட்டில் உள்ள ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை, கன்னி போன்ற வகை நாய்களும் போட்டியில் கலந்து கொண்டு உள்ளன. இந்த கண்காட்சியில் நாய்களின் பற்கள், நடை, உருவ அமைப்பு போன்றவற்றை வைத்து பதக்கம் வழங்க படும் என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். மேலும் இந்திய நாட்டு நாய் ரகங்களை மற்ற வெளிநாடு நாய்களுக்கு இணையான அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் விரைவில் நம் நாட்டு நாய் ரகங்களும் உலக அளவில் புகழ்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT